TBC News Malaysia

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

“கருப்பசாமி” பாடல் எப்படி உருவானது? – ‘கருப்பு’ வெற்றிக்குப் பின்னாலான கதையை பகிர்ந்த சூர்யா

Share This Article:

சூர்யா நடித்த ‘கருப்பு’ திரைப்படம் உலகளவில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அதிலுள்ள “கருப்பசாமி” பாடல் எப்படி உருவானது என்பதை நடிகர் சூர்யா பகிர்ந்துள்ளார். படத்தின் எடிட்டிங் முடிந்த பிறகே அந்தப் பாடல் சேர்க்கப்பட்டதாகவும், தற்போது ரசிகர்கள் அதனை திரையரங்குகளில் கொண்டாடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“கருப்பசாமி” பாடல் எப்படி உருவானது? – ‘கருப்பு’ வெற்றிக்குப் பின்னாலான கதையை பகிர்ந்த சூர்யா

சூர்யா மற்றும் திரிஷா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய இந்தப் படம் உலகளவில் ரூ.207 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிலேயே ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சுவாசிகா, யோகி பாபு, இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

படத்தின் வெற்றியை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த சூர்யா, “கருப்பு” திரைப்படம் எப்படி உருவானது மற்றும் அதிலுள்ள “கருப்பசாமி” பாடல் உருவான பின்னணியை பகிர்ந்துகொண்டார்.

அவர் கூறுகையில், இந்தப் படத்தை உருவாக்கும் முடிவு மிகக் குறுகிய நேரத்திலேயே எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி மீது வைத்திருந்த நம்பிக்கையே இந்தத் திட்டத்தை உருவாக்கியதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், படத்தின் எடிட்டிங் பணிகள் முடிந்த பிறகே “கருப்பசாமி” பாடலை சேர்க்கும் யோசனை வந்ததாகவும், தனது உதவியாளர் அந்தப் பாடல் இருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கூறியதாகவும் சூர்யா தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து சுமார் ஐந்து மாதங்கள் கழித்து அந்தப் பாடல் படமாக்கப்பட்டதாகவும், இன்று அந்தப் பாடலே திரையரங்குகளில் ரசிகர்களால் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுவது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் கூறினார்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions