TBC News Malaysia

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

தமிழாய்ந்த தமிழர் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன்!

Share This Article:

மலேசிய இந்திய சமுதாய அரசியல் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் தலைவர்களில் டத்தோஸ்ரீ எம். சரவணனை கடந்து சென்று விட முடியாது.

தமிழாய்ந்த தமிழர் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன்!

ம. இ. கா.வின் இன்றைய அரசியலில் பெயர் சொல்லும் அளவுக்கு தன் சேவையின் மூலம் சமுதாயக் குரலாக எதிரொலித்து வருகிறார் என்றால் அவை மிகையில்லை.


தமிழ்ச் சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சமூகக் குரலாக எதிரொலிக்கும் டத்தோஸ்ரீ சரவணன் இன்றும் மக்கள் மனங்களில் நிலைத்து வருகிறார்.


மணிமன்ற மைந்தனாக பரிமாணம் பெற்று நாடு போற்றும் தலைவராக உருவெடுத்துள்ளதானது அவரின் அயராத உழைப்பு என்றால் மாற்றுக் கருத்தில்லை.

Content image

பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா தோற்றம் இந்திய சமுதாயத்தின் அடையாளமாக உருவாகிட டத்தோஸ்ரீ சரவணனின் முயற்சியை மறந்துவிட முடியாது.


இன்று லிட்டல் இந்தியா எனும் பெயர் மற்ற இடங்களில் பரவுவதற்கும் டத்தோஸ்ரீ சரவணன் போட்ட பிள்ளையார் சுழிதான்.


கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பார்கள். அதுபோல கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கு விழா எடுத்த பெருமையும் அவரையே சாரும்.

Content image

கவியரசர் கண்ணதாசனுக்கு விழா எடுத்ததன் மூலம் கண்ணதாசனின் புகழை இளம் தலைமுறையினருக்கு எடுத்துச் சொன்ன இலக்கியச் செம்மல்தான் அவர்.


துன் மகாதீர், துன் அப்துல்லா படாவி, டத்தோஸ்ரீ நஜிப், தான்ஸ்ரீ மொகீதின், டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி ஆகியோர் பிரதமராக பதவி வகித்த காலத்தில் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய பெருமையும் அவருக்கே உண்டு.


சிங்கத்தின் கால்கள் பழுதுப்பட்டாலும் அதன் சீற்றம் குறைவதில்லை எனும் கவியரசரின் வாக்கு என்றும் பொய்த்ததில்லை.


டத்தோஸ்ரீ சரவணன் ம. இ. கா.வுக்கு மட்டுமல்ல இந்திய சமுதாயத்திற்கே ஒரு கம்பீரம் என்பதை மறுக்க முடியாது.


*தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை, தொண்டு செய்த பாட்டுக்கொரு புலவன் பாரதிதான் செத்ததுண்டோ?*


சரவணன் அரசியலுக்கோர் சிம்ம சொப்பனம் !

Content image

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions