TBC News Malaysia

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

நஜிப்பின் வீட்டுக் காவல்: மனைவி ரோஸ்மாவுக்கு அனுமதி மறுப்பு - வெளியானது புதிய தகவல்!

Share This Article:

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தனது மீதமுள்ள சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்கவுள்ள நிலையில், அவருடன் குடும்பத்தினர் தங்குவதற்கு அனுமதி இல்லை என அம்னோ மகளிர் அணித் தலைவி நூருல்ஹிதாயா தெரிவித்துள்ளார்.

நஜிப்பின் வீட்டுக் காவல்: மனைவி ரோஸ்மாவுக்கு அனுமதி மறுப்பு - வெளியானது புதிய தகவல்!

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தனது மீதமுள்ள சிறைத்தண்டனையை ஆகஸ்ட் 23, 2028 வரை வீட்டுக் காவலில் கழிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.இதற்காக அவர் காஜாங் சிறையிலிருந்து கோலாலம்பூர் தாமான் டூத்தாவில் உள்ள அவரது இல்லத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.இந்நிலையில், வீட்டுக் காவலில் இருக்கும்போது குடும்பத்தினர் அவருடன் வசிக்க முடியுமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்தது.நஜிப்பின் வழக்கறிஞரான ஷாஃபி அப்துல்லாவிடம் இது குறித்துக் கேட்டபோது, தனக்குச் சரியான விதிமுறைகள் தெரியாது என்றும், குடும்ப உறுப்பினர்கள் அனுமதிக்கப்படலாம் அல்லது நிராகரிக்கப்படலாம் என்றும் கூறியிருந்தார்.

இந்தக் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அம்னோ மகளிர் அணியின் செயற்குழு உறுப்பினர் நூருல்ஹிதாயா அஹ்மத் ஜாஹித் புதிய விளக்கத்தை அளித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் நெட்டிசன் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், நஜிப் தங்கவைக்கப்பட்டுள்ள இல்லம் அதிகாரப்பூர்வமாக ஒரு 'சிறைச்சாலையாக' அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

Content image

எனவே, சாதாரண சிறையில் உள்ள கைதிகளுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள் உண்டோ, அவை அனைத்தும் நஜிப்புக்கும் பொருந்தும்.வெளியே இருந்து ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட முடியாது என்றும், சிறைத்துறை அதிகாரிகள் தீர்மானிக்கும் உணவை மட்டுமே அவர் உட்கொள்ள வேண்டும் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இந்தக் கடுமையான விதிகளின்படி, நஜிப்பின் மனைவியும் குழந்தைகளும் அவருடன் தங்குவதற்குச் சட்டத்தில் இடமில்லை.இதனால் அவரது மனைவி ரோஸ்மா மன்சோர், பெவிலியனில் உள்ள தனது சொந்த இல்லத்தில் தொடர்ந்து வசிப்பார்.சாதாரண கைதிகளை அவர்களின் உறவினர்கள் எப்படி குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே சந்திக்க முடியுமோ, அதேபோல்தான் நஜிப்பின் குடும்பத்தினரும் அவரைப் பார்க்க முடியும். வீட்டுக் காவல் என்றாலும், நஜிப் இன்னும் ஒரு கைதி அந்தஸ்தில்தான் இருக்கிறார் என்பதை இந்த விதிமுறைகள் தெளிவாக உணர்த்துகின்றன.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions