TBC News Malaysia

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

சீன உளவாளியைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை: ஜென்சன் ஹுவாங்கை சிக்கவைத்த கிம்பர்லி பவல் யார்?

Share This Article:

என்விடியா சிஇஓ ஜென்சன் ஹுவாங் மீது ஏற்கனவே சீன உளவாளியுடன் தொடர்பு இருந்ததாக குற்றச்சாட்டு உள்ள நிலையில், தற்போது தனது நிறுவனத்தின் துணைத் தலைவரான கிம்பர்லி பவலுடனும் அவருக்கு ரகசிய உறவு இருப்பது அம்பலமாகியுள்ளது. இதனால் அவரது பதவிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

சீன உளவாளியைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை: ஜென்சன் ஹுவாங்கை சிக்கவைத்த கிம்பர்லி பவல் யார்?

என்விடியா (Nvidia) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான ஜென்சன் ஹுவாங் மாபெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறார். அமெரிக்க உளவுத்துறையால் சீன உளவாளி என சந்தேகிக்கப்படும் ஆலிஸ் ஹுவாங் என்ற பெண் தொழிலதிபருடன் தனக்கு இருந்த உறவை சமீபத்தில் அவர் ஒப்புக்கொண்டார். தற்போது அவருக்கு இன்னொரு விவகாரமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது நிறுவனத்தில் சுகாதாரப் பிரிவின் துணைத் தலைவராக கடந்த 18 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் கிம்பர்லி பவலுடன் அவருக்கு ரகசியத் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, கடந்த மார்ச் மாதம் சான் ஜோஸில் நடந்த என்விடியா மாநாட்டின் போது ஹுவாங்கும், 48 வயதான கிம்பர்லி பவலும் ஒரு உணவகத்தில் நெருக்கமாக இருந்ததை அங்கிருந்த ஒருவர் படம்பிடித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகின்றன; ஹுவாங் 1985-ஆம் ஆண்டில் லோரி மில்ஸ் என்பவரையும், கிம்பர்லி மருத்துவ கண்டுபிடிப்பாளரான கிரஹாம் ஜெரேட் என்பவரையும் மணந்தவர்கள். இந்த செய்தி வெளியானவுடன், தான் கலந்துகொள்ளவிருந்த மில்கென் சுகாதார மாநாட்டில் (Milken Future of Health Summit) பங்கேற்பதை கிம்பர்லி பவல் ரத்து செய்துள்ளார்.

Content image

என்விடியா நிறுவனத்தின் நடத்தை விதிகளின்படி, நிர்வாகப் பதவியில் இருப்பவர்கள் தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களுடன் தனிப்பட்ட உறவு வைத்துக்கொள்வது விதிகளுக்கு முரணானதாகும்; விதிமீறல்கள் நிரூபிக்கப்பட்டால் பணிநீக்கம் செய்யப்படலாம். முன்னாள் எஸ்.இ.சி (SEC) தலைவர் கேரி ஜென்ஸ்லர் சிஎன்என் (CNN) செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, இந்த இரண்டாவது ரகசிய உறவு நிரூபிக்கப்பட்டால் ஹுவாங் பதவியில் இருந்து வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார். ஆலிஸ் ஹுவாங் விவகாரத்தை விசாரிக்க ஏற்கனவே ஜோன் எச் கிம் (Joon H Kim) உள்ளிட்ட சுயாதீன வழக்கறிஞர்கள் குழுவை என்விடியா வாரியம் அமைத்துள்ள நிலையில், தற்போதைய குற்றச்சாட்டும் நிறுவனத்தின் நற்பெயருக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தொடர் ஊழல்களால் ஜென்சன் ஹுவாங்கின் தலைமைப் பதவிக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த 33 ஆண்டுகளாக தான் வகித்து வரும் உயரிய பதவியில் இருந்து அவர் நீக்கப்படக்கூடிய அபாயம் எழுந்துள்ளது. இது குறித்து முடிவெடுக்க என்விடியா நிறுவனத்தின் இயக்குனர் வாரியம் இன்று (நவம்பர் 12) கூடி முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மற்றும் பைனான்சியல் டைம்ஸ் ஆகிய நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions