TBC News Malaysia

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

பினாங்கில் உலக லையன்ஸ் கிளப் மாநாடு: 8,000 பேர் பங்கேற்புடன் கோலாகலத் தொடக்கம்!

Share This Article:

பினாங்கில் 'உலகைக் கட்டுவது' என்ற கருப்பொருளில் 63-வது லையன்ஸ் கிளப் OSEAL மாநாடு நவம்பர் 12 முதல் 15 வரை நடைபெறுகிறது. உலகெங்கிலும் இருந்து சுமார் 8,000 பேர் பங்கேற்கும் இந்த நிகழ்வு, உள்ளூர் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறைக்குப் பெரும் ஊக்கமளிக்கவுள்ளது.

பினாங்கில் உலக லையன்ஸ் கிளப் மாநாடு: 8,000 பேர் பங்கேற்புடன் கோலாகலத் தொடக்கம்!

'உலகைக் கட்டுவது' (Building the World) என்ற முழக்கத்தோடு, லையன்ஸ் கிளப்பின் 63-வது தென்கிழக்காசிய (OSEAL) மாநாடு பினாங்கில் நாளை (நவம்பர் 12) களைகட்டுகிறது.வரும் 15-ஆம் தேதி வரை செத்தியா ஸ்பைஸ் (Setia SPICE) மாநாட்டு மையத்தில் நடைபெறும் இந்த மாபெரும் நிகழ்வில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 8,000 லையன்ஸ் உறுப்பினர்களும், அவர்களது குடும்பத்தினரும் நண்பர்களும் கலந்து கொள்கிறார்கள்.

புக்கிட் ஜம்புல் கோல்ப் கிளப்பில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், பினாங்கு மாநில லையன்ஸ் கிளப் தலைவரும் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான டத்தோ ஓய் சாவ் சியூவான் இந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். பினாங்கு முதலமைச்சர் சாவ் கோன் யுவாவ் இந்த மாநாட்டைத் தொடங்கி வைக்கவுள்ளார். இவ்வளவு பெரிய சர்வதேச மாநாடு பினாங்கில் நடப்பது, உள்ளூர் சுற்றுலாத் துறைக்கும் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய வருவாயைக் கொடுக்கும் என டத்தோ ஓய் சாவ் சியூவான் நம்பிக்கை தெரிவித்தார்.

Content image

அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் லையன்ஸ் அனைத்துலகத் தலைவர் மார்க் லியோன் இந்த மாநாட்டின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசினார். உலகெங்கும் உள்ள உறுப்பினர்களை ஒன்றிணைத்து, மனிதநேயச் சேவை சார்ந்த அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ள இந்த மாநாடு ஒரு சிறந்த அடித்தளமாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார். இந்தியா, சிங்கப்பூர், ஜப்பான், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் பினாங்கில் குவிகிறார்கள்.இதன் மூலம் பினாங்கின் கலாச்சாரம், உணவு மற்றும் பாரம்பரியம் உலகளவில் இன்னும் சிறப்பான இடத்தைப் பிடிக்கும்.

நாளை மாநாடு தொடங்கினாலும், இதன் பிரம்மாண்ட திறப்பு விழா நவம்பர் 13-ஆம் தேதி ஸ்பைஸ் அரினாவில் நடைபெறுகிறது.தொடர்ந்து கருத்தரங்குகள், சிறப்பு விருந்துகள் மற்றும் தலைமைத்துவ மேம்பாட்டுப் பயிற்சிகள் எனப் பல நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.லையன்ஸ் கிளப் அறக்கட்டளையின் (LCIF) மனிதநேயப் பங்காளரான டத்தோ ஸ்ரீ கோ எங் ஹோ, இந்த மாநாட்டின் ‘டார்ச்’ (Torch) தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். 1917 முதல் சமூக சேவையில் ஈடுபட்டு வரும் லையன்ஸ் இயக்கம், இந்த மாநாட்டின் வழியாகக் சர்வதேச நட்புறவை வளர்த்து, அதனை ஆக்கப்பூர்வமான சேவைகளாக மாற்றும் என முன்னாள் சர்வதேசத் தலைவர் ஏ.பி. சிங் மற்றும் மேஜர் பரமகுரு பாலன் ஆகியோர் குறிப்பிட்டனர்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions