TBC News Malaysia

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

மீண்டும் RTD முகவராக களமிறங்க Zetrix AI திட்டம்: RM100 மில்லியன் முன்பணம் செலுத்த முன்மொழிவு!

Share This Article:

மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறையின் (RTD) முகவராக மீண்டும் செயல்பட, நிலுவையில் உள்ள தொகையில் RM100 மில்லியனை முன்பணமாகச் செலுத்த Zetrix AI நிறுவனம் முன்வந்துள்ளது. மீதமுள்ள தொகையை 6 மாதங்களில் செலுத்த அனுமதி கோரியுள்ள நிலையில், இந்த விவகாரம் நிதி அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மீண்டும் RTD முகவராக களமிறங்க Zetrix AI திட்டம்: RM100 மில்லியன் முன்பணம் செலுத்த முன்மொழிவு!

மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறையின் (RTD) வருவாய் வசூலிக்கும் முகவராக மீண்டும் செயல்பட Zetrix AI நிறுவனம் புதியதொரு திட்டத்தை முன்வைத்துள்ளது. முன்பு MyEG என அழைக்கப்பட்ட இந்நிறுவனம், அரசுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையில் RM100 மில்லியனை உடனடியாகப் செலுத்துவதாகவும், மீதமுள்ள தொகையை அடுத்த ஆறு மாதங்களில் தவணை முறையில் அடைப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை போக்குவரத்துத் துறை துணை அமைச்சர் டத்தோ ஹஸ்பி ஹபிபோல்லா நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

மே மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் வசூலித்த சுமார் RM314 மில்லியன் வருவாயை அரசுக்குச் செலுத்தத் தவறியதால், கடந்த அக்டோபர் மாதம் Zetrix AI மற்றும் MyEG நிறுவனங்களின் சேவையை RTD தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. ஒப்பந்த விதிமீறலுக்காக அந்நிறுவனத்திற்கு RM29 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் சேவைகளுக்குத் தடை ஏற்படக் கூடாது என்பதற்காகவே அரசு இதற்கு முன் பலமுறை அவகாசம் அளித்ததாக துணை அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

Content image

சட்டப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பவும், தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடவும் போக்குவரத்து அமைச்சகம் தயாராகவே இருந்தது. ஆனால், தற்போது Zetrix AI நிறுவனம் முன்வைத்துள்ள இந்த சமரசத் திட்டத்தை அரசு ஏற்றுக்கொண்டால், சட்ட நடவடிக்கைகள் தற்காலிகமாக கைவிடப்படும். இந்த சமரசத் திட்டம் தற்போது நிதி அமைச்சகத்தின் முழுமையான ஆய்வில் இருந்து வருகிறது.

நிலுவைத் தொகையை வசூலிப்பதற்காக, தவறு செய்த அதே நிறுவனத்திற்கு மீண்டும் ஒப்பந்தம் வழங்குவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கேள்விகளை எழுப்பியுள்ளனர். அபராதம் உட்பட அனைத்து நிலுவைத் தொகைகளையும் முழுமையாகச் செலுத்துவது மட்டுமே நிறுவனத்தின் சேவை நீட்டிப்புக்கான முதல் படி என முன்னாள் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் ஏற்கனவே திட்டவட்டமாகக் கூறியிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது. நிதி அமைச்சகத்தின் முடிவைப் பொறுத்தே Zetrix AI-இன் எதிர்காலம் தீர்மானிக்கப்படும்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions