TBC News Malaysia

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

ஏழை இளைஞர்களுக்காக ‘டத்தோ யோகேஸ்’ 2ஆம் ஆண்டு நல்லெண்ண கோல்ஃப் போட்டி

Share This Article:

பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற ‘டத்தோ யோகேஸ்’ 2வது ஆண்டு நல்லெண்ண கோல்ஃப் போட்டி மூலம் ஏழை மற்றும் பின்தங்கிய இளைஞர்களின் தொழிற்கல்விக்காக சுமார் 3 லட்சம் ரிங்கிட் நிதி திரட்டப்பட்டது. MySkills அறக்கட்டளைக்கு ஆதரவாக நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்வேறு சமூகத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

ஏழை இளைஞர்களுக்காக ‘டத்தோ யோகேஸ்’ 2ஆம் ஆண்டு நல்லெண்ண கோல்ஃப் போட்டி

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கோல்ஃப் மற்றும் கண்ட்ரி கிளப்பில், சமூக நல நோக்கத்துடன் ‘டத்தோ யோகேஸ்’ ஏற்பாடு செய்திருந்த 2026ஆம் ஆண்டுக்கான 2வது ஆண்டு நல்லெண்ண கோல்ஃப் போட்டி சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், நிதி வசதி குறைந்த இளைஞர்களின் தொழிற்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு ஆதரவளிப்பதாகும். குறிப்பாக MySkills அறக்கட்டளையின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் முயற்சியாக இந்த நிதி திரட்டும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நல்லெண்ண கோல்ஃப் போட்டி மூலம் சுமார் 3 லட்சம் ரிங்கிட் நிதி திரட்டப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நிகழ்ச்சியில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தினர். தொழிற்கல்வி பெறும் இளைஞர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் எதிர்கால வேலை வாய்ப்புகளை மேம்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் பல்வேறு பிரிவுகளுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன. Medal A பிரிவில் லோகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். Medal B பிரிவில் டத்தோ இணையன் முதலிடம் பிடித்தார். Medal C பிரிவில் பால கிருஷ்ணன் சிறந்த ஆட்டக்காரராகத் தேர்வு செய்யப்பட்டார்.

நிகழ்வில் பேசிய டத்தோ யோகேஸ், சமூகத்தின் பின்தங்கிய இளைஞர்களுக்கு திறன் மற்றும் கல்வி வாய்ப்புகளை உருவாக்குவது மிகவும் அவசியம் என்றும், இத்தகைய முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions