TBC News Malaysia

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

பினாங்கு முன்னாள் காவல் துறை ஆணையர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆ.தெய்வீகன் மலாயா பல்கலைக்கழக இணைப் பேராசிரியராக நியமனம்!

Share This Article:

பினாங்கு முன்னாள் காவல் துறை ஆணையர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆ.தெய்வீகன், மலேசியாவின் புகழ்பெற்ற மலாயா பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். காவல் துறையில் நீண்டகால அனுபவமும், நிர்வாகம் மற்றும் சமூக பாதுகாப்பு தொடர்பான பணியாற்றிய அனுபவமும் கொண்ட அவரின் புதிய கல்விப் பொறுப்பு, உயர்கல்வித் துறையில் முக்கியமான அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.

பினாங்கு முன்னாள் காவல் துறை ஆணையர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆ.தெய்வீகன் மலாயா பல்கலைக்கழக இணைப் பேராசிரியராக நியமனம்!

பினாங்கு மாநில காவல் துறையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற டத்தோஸ்ரீ டாக்டர் ஆ.தெய்வீகன், மலாயா பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியராக (Adjunct Professor) நியமிக்கப்பட்டுள்ளார்.

அரச மலேசிய காவல் துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறப்புடன் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், தற்பொழுது கல்வித் துறையிலும் தனது முத்திரையைப் பதிக்கத் தொடங்கியுள்ளார். இவரைப் பெருமைப்படுத்தும் வகையில் மலேசிய குற்றத் தடுப்பு அறவாரியம் (MCPF) தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.

​காவல் துறையில் தனது பணிக்காலத்தில் அசாத்திய திறமையாலும், துணிச்சலாலும் பல சிக்கலான உயர்நிலை வழக்குகளுக்குத் தீர்வு கண்ட பெருமை இவருக்கு உண்டு.

பினாங்கு மாநில காவல் துறைத் தலைவராகப் பொறுப்பு வகித்த காலத்தில், பெருங்குற்ற நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி குற்ற விகிதத்தைக் கணிசமாகக் குறைத்தார். அத்துடன், பல கொலை வழக்குகளில் துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளிகளைக் கண்டறிந்து சாதனை படைத்தார். இவரின் இத்தகைய தொலைநோக்குப் பார்வையும், 'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' என்ற கோட்பாட்டிற்கு ஏற்ப ஆற்றிய நற்பணியும் இன்றும் காவல் துறை அதிகாரிகளுக்குச் சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளன.

​சமூகப் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்புத் துறைகளில் இவர் ஆற்றிய சேவைகளுக்கு அப்பால், தமிழ் மொழி மற்றும் திருக்குறள் மீதான இவரின் ஈடுபாடு அளப்பரியது. தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை கொண்ட இவர், திருக்குறள் வாழ்வியல் கருத்துகளைத் தனது உரைகள் மூலம் சமூகத்திற்குத் தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறார். பொது மேடைகளில் திருக்குறளின் நேர்மை, அறநெறி மற்றும் தலைமுறைத் தலைமையத்துவக் கோட்பாடுகளை மிகத் தெளிவாக எடுத்துரைப்பதில் இவருக்கு நிகர் அவரே என்று போற்றப்படுகிறார்.

Content image

நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனமான மலாயா பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராக இவர் நியமிக்கப்பட்ருப்பது, இவரின் அனுபவத்திற்கும் நிபுணத்துவத்திற்கும் கிடைத்த மிகச்சிறந்த அங்கீகாரமாகும். இவரின் பரந்த அனுபவமும், துறையார்ந்த அறிவும் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித் துறைக்கு மட்டுமின்றி, எதிர்காலத் தலைமுறையினரின் தொழில்முறை வளர்ச்சிக்கும், அறிவுப் பகிர்விற்கும் பெரும் பல சேர்க்கும் என்று மலேசிய குற்றத் தடுப்பு அறவாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

​35 ஆண்டுகால அரசாங்கப் பணிக்குப் பிறகும் ஓய்வெடுக்காமல், தொடர்ந்து கல்வியிலும் சமூக மேம்பாட்டிலும் கவனம் செலுத்தி வரும் டத்தோஸ்ரீ டாக்டர் ஆ.தெய்வீகன், இன்றைய தமிழ் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் வழிகாட்டியாகவும் திகழ்கிறார்.

இவரின் புதிய சேவைப் பயணம் கல்வி நிறுவனத்திற்கும், சமூகத்திற்கும், நாட்டிற்கும் மேலும் பல நன்மைகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions