TBC News Malaysia

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

2031-க்குள் 1,600 மின்சார பேருந்துகள் – மத்திய அரசு பிரம்மாண்ட திட்டம்!

Share This Article:

​பினாங்கு மாநிலத்தை 'பசுமை மாநிலமாக' மாற்றும் நோக்கில், பொதுப் போக்குவரத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை மத்திய அரசு மற்றும் பிரசாரானா நிறுவனம் இணைந்து தொடங்கியுள்ளன.

2031-க்குள் 1,600 மின்சார பேருந்துகள் – மத்திய அரசு பிரம்மாண்ட திட்டம்!

பினாங்கு மாநிலத்தை 'பசுமை மாநிலமாக' மாற்றும் நோக்கில், பொதுப் போக்குவரத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை மத்திய அரசு மற்றும் பிரசாரானா நிறுவனம் இணைந்து தொடங்கியுள்ளன.

இதன் தொடக்கமாக, 'ராபிட் பினாங்கு' நிறுவனத்தின் சார்பில் 15 புதிய மின்சார பேருந்துகள் (Electric Buses) 17-அக்டோபர் முதல் தீவு மற்றும் வீதியெங்கும் இயங்கத் தொடங்கியுள்ளன. வெல்ட் குவே பணிமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இச்சேவையைத் தொடங்கி வைத்தார்.

Content image

சுற்றுச்சூழல் புரட்சி. தேசிய ஆற்றல் மாற்றல் திட்டத்தின் கீழ், வரும் 2031-ஆம் ஆண்டிற்குள் ராபிட் பினாங்கு மற்றும் ராபிட் கே.எல் நிறுவனங்களின் டீசல் பேருந்துகள் முற்றிலும் அகற்றப்பட்டு, படிப்படியாக 1,600 மின்சார பேருந்துகள் சேவையில் ஈர்க்கப்படவுள்ளன.

​முதற்கட்டமாக ரிம 200 மில்லியன் செலவில் 250 மின்சார பேருந்துகள் வாங்கப்படுகின்றன. இதில் பினாங்கிற்கு 75 பேருந்துகளும், கோலாலம்பூருக்கு 175 பேருந்துகளும் ஒதுக்கப்படவுள்ளன.

​சிறிய மற்றும்

Content image

பெரிய பேருந்துகள். தற்சமயம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 15 பேருந்துகளில், 14 பேருந்துகள் குறுகிய சாலைகளுக்கு ஏதுவான 8.25 மீட்டர் நீளமும், ஒன்று 12 மீட்டர் நீளமும் கொண்டவை ஆகும்.

​மின்சார பேருந்துகளின் பயன்பாட்டிற்காகப் பணிமனைகளில் சார்ஜிங் மையங்கள் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

​இவ்விழாவில் பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு, பினாங்கு மாநகரக் கழக மேயர் டத்தோ பொறியாளர் ஏ. ராஜேந்திரன் மற்றும் பிரசாரானா தலைவர் தான்ஸ்ரீ முகமட் நசீர் அகமட் ஆகியோர் கலந்து கொண்டு, சுற்றுச்சூழல் சார்ந்த இம்மாற்றத்திற்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

Content image

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions