வள்ளல் மனங்களின் ஒளியில் மிளிரும் தீபாவளி - 20 ஆண்டுக் கால டத்தோ ஆறுமுகத்தின் நெகிழ்ச்சியான ஈகைப் பயணம்!
"ஒளிமயமான பண்டிகை என்பது ஆடம்பரக் கொண்டாட்டங்களில் இல்லை, ஆதரவற்றோரின் புன்னகையில்தான் உண்மையான தீபாவளி வாழ்கிறது என்பதைத் தனது தொடர் அறப்பணிகள் மூலம் உணர்த்தி வருகிறார் மலேசியாவின் முன்னணி பாதுகாப்புச் சேவை நிறுவனமான 'லிசன் செக்யூரிட்டி'யின் நிர்வாக இயக்குநர் டத்தோ ஆறுமுகம் சின்னசாமி.
"ஒளிமயமான பண்டிகை என்பது ஆடம்பரக் கொண்டாட்டங்களில் இல்லை, ஆதரவற்றோரின் புன்னகையில்தான் உண்மையான தீபாவளி வாழ்கிறது என்பதைத் தனது தொடர் அறப்பணிகள் மூலம் உணர்த்தி வருகிறார் மலேசியாவின் முன்னணி பாதுகாப்புச் சேவை நிறுவனமான 'லிசன் செக்யூரிட்டி'யின் நிர்வாக இயக்குநர் டத்தோ ஆறுமுகம் சின்னசாமி.
வணிக இலக்குகளைத் தாண்டி, மனிதநேயத்தையும் சமூகப் பொறுப்புணர்வையும் (CSR) நிறுவனத்தின் அடிப்படை அறமாகக் கொண்டு இயங்கி வரும் இவர், கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வசதி குறைந்த மற்றும் ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்வில் தீபாவளி ஒளியை ஏற்றி வருகிறார்.
குறிப்பாக, கடந்த பத்தாண்டுகளாக 'மலேசியா வள்ளல் சமூகநல அமைப்பின்' குழந்தைகளுக்குத் தவறாமல் தீபாவளி அன்பளிப்புகளை வழங்கி ஆசிர்வதித்து வருகிறார்.
குழந்தைகளின் கைகளில் ஆங் பாவ் எனப்படும் தீபாவளி ரொக்கப் பணமும் வழங்கி, லிட்டில் இந்தியாவில் ஆடை அணிகலன்களை கொள்முதல் செய்து 15 குழந்தைகளின் முகத்திலும் அகத்திலும் கோலாகலத்தை உருவாக்கி உள்ளார் டத்தோ ஆறுமுகம் சின்னச்சாமி.
மேலும் இதன் தொடர்ச்சியாக, பினாங்கு லிட்டில் இந்தியா பகுதியில் அமைந்துள்ள பிரபல ஆடை நிறுவனத்தில் குழந்தைகளுக்குப் புத்தாடை தேர்வு செய்யும் சிறப்பு நிகழ்வு நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
வள்ளல் சமூகநல அமைப்பைச் சேர்ந்த 15 சிறுவர்-சிறுமியர் இந்நிகழ்வில் பங்கேற்று, தங்களுக்குப் பிடித்தமான வண்ண வண்ணத் தீபாவளி உடைகளைத் தாங்களே ஆர்வத்துடன் தேர்ந்தெடுத்தனர்.
குழந்தைகளின் மகிழ்ச்சி அலைமோதிய இந்நிகழ்வில், டத்தோ ஆறுமுகம் சின்னசாமி அவர்களின் கைகளால் 'ஆங் பாவ்' பண அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன. புத்தாடை வாங்கிய மகிழ்ச்சியோடு, அங்குள்ள 'அடையார் ஆனந்த பவன்' உணவகத்தில் குழந்தைகளுக்குச் சுவையான இரவு விருந்தும் பரிமாறப்பட்டது.
முன்னதாக, பினாங்கு உமையாள் நிறுவனத்தில் உள்ள குழந்தைகளுக்கும் முதற்கட்டமாகப் புத்தாடைகளும் இரவு உணவும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
"சமூக அரவணைப்பை உணர்த்துவதே நோக்கம்": என்று டத்தோ ஆறுமுகம் சின்னசாமி நெகிழ்ச்சி கொண்டார்.
தனது இந்த ஈகைப் பயணம் குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்ட டத்தோ ஆறுமுகம் சின்னசாமி
தீபாவளி என்பது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல, அது பகிர்வின் அடையாளம். சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள இந்தக் குழந்தைகளும் பண்டிகைக் காலங்களில் மற்றவர்களைப் போல முழு மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும். நாங்கள் தனித்து விடப்படவில்லை, எங்களை அரவணைக்கச் சமூகம் இருக்கிறது' என்ற நம்பிக்கையை அவர்களுள் விதைப்பதே எங்கள் முதன்மை நோக்கம்" எனக் குறிப்பிட்டார்.
கார்ப்பரேட் உலகிற்கு ஒரு வழிகாட்டி நிறுவனமான இந்த பாதுகாப்பு நிறுவனம்
நாடு முழுவதும் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் வணிகத் துறையிலும் பொது நிறுவனங்களுக்கும் தொழில்முறை பாதுகாப்புச் சேவைகளை வழங்கி முதன்மை நிறுவனமாகத் திகழும் 'லிசன் செக்யூரிட்டி', தனது வருவாயில் ஒரு பகுதியைச் சமூக நலனுக்காக ஒதுக்கி முன்னுதாரணமாக விளங்கி வருகிறது.
வணிக நிறுவனங்கள் எவ்வாறு சமூகப் பொறுப்புடன் இயங்க வேண்டும் என்பதற்குச் சான்றாகத் திகழும் டத்தோ ஆறுமுகம் சின்னசாமியின் இந்த 20 ஆண்டுக் கால ஈகைப் பணி, வரவிருக்கும் தீபாவளித் திருநாளுக்குச் சான்றாக அமைந்து, பலரின் மனங்களிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.