TBC News Malaysia

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

இருளில் ஒளிரும் ஏரோபிக் 2026’ உடற்பயிற்சி நிகழ்ச்சி - கடார கர்ணன் டாக்டர் சின்னையா, சட்டமன்ற உறுப்பினர் அடாம் லோ பங்கேற்பு!

Share This Article:

சுங்கை பட்டாணி, ரிவர்ஃப்ரண்ட் சிட்டியில் ‘இருளில் ஒளிரும் ஏரோபிக் 2026’ (GLOW IN THE DARK AEROBIC 2026) உடற்பயிற்சி நிகழ்ச்சி மிகக் கோலாகலமாக நடைபெற்றது.

இருளில் ஒளிரும் ஏரோபிக் 2026’ உடற்பயிற்சி நிகழ்ச்சி - கடார கர்ணன் டாக்டர் சின்னையா, சட்டமன்ற உறுப்பினர் அடாம் லோ பங்கேற்பு!

​பொதுமக்களிடையே உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆரோக்கியமான வாழ்வியல் முறையை ஊக்குவிக்கவும் ZBA மற்றும் PSKM அமைப்புகள் இணைந்து இந்நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தன.

​இன்று மாலை நடைபெற்ற இந்த உடற்பயிற்சி நிகழ்வில், 'கடார கர்ணன்' டாக்டர் சின்னையா சிறப்பு வருகை புரிந்ததோடு, இந்நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற நிதி உதவியும் வழங்கி ஆதரவளித்தார்.

Content image

மேலும், இந்நிகழ்வில் சுங்கை பட்டாணி, பாக்கார் ஆராங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அடாம் லோ, டாக்டர் ஜோபினா நாயுடு, டாக்டர் மதியழகன் ஆகியோருடன் மலாய், இந்திய, சீன சமூகப் பிரமுகர்களும் திரளான பொதுமக்களும் கலந்துகொண்டு உற்சாகத்துடன் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர். ​இந்நிகழ்ச்சியின் முதன்மைச் சிறப்பு விருந்தினராகச் சுங்கை பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் முகமது தௌபிக் பின் ஜோஹாரி முழு ஆதரவு வழங்கினார். கடார மண்ணில் தமிழ், மலாய், சீனம் என்று மூன்று மக்களுக்கு சமூகநல சேவையை வழங்கிவரும் டாக்டர் சின்னையா அவர்களின் சேவை அளப்பரிது என்று ஏற்பாட்டாளர் சூல்கிஃப்லி கண்ணீர் மல்க கூறினார்.

Content image

இவர்களுடன் இன்னும் பல சிறப்பு அழைப்பாளர்களும் திரளாகப் பங்கேற்றனர்.

​இவ்விழாவிற்குத் தபிதா (TABITHA), பாமா (PAMA), மலேசியா மடானி (MALAYSIA MADANI) மற்றும் சுங்கை பட்டாணி நாடாளுமன்ற மக்கள் சேவை மையம் ஆகியவை அதிகாரப்பூர்வ ஆதரவையும் அனுசரணையையும் வழங்கியிருந்தன. ​குடும்பத்துடன் திரளாக வருகை தந்து இந்த வண்ணமயமான உடற்பயிற்சி நிகழ்ச்சியை வெற்றிகரமாக்கிய பொதுமக்கள் அனைவருக்கும், அமைப்பாளர் திரு. சூல்கிஃப்லி தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Content image

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions