TBC News Malaysia

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

பினாங்கு எம்.ஜி.ஆர் நற்பணி மன்றம் சார்பில் தீபாவளிப் திருநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது!

Share This Article:

​பினாங்கு மாநில ஆயிரத்தில் ஒருவன் இதயக்கனி எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தின் தலைவர் எம்.ஜி. குமார் தலைமையில், 36 மாணவ-மாணவிகள், 18 முதியவர்கள் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளிக்கு தலா 100 ரிங்கிட் மதிப்புள்ள தீபாவளிப் பொருட்களும் ரொக்க அன்பளிப்பும் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

பினாங்கு எம்.ஜி.ஆர் நற்பணி மன்றம் சார்பில் தீபாவளிப் திருநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது!

​'கடார கர்ணன்' டாக்டர் சின்னையா மற்றும் அவரது துணைவியார் டாக்டர் ஜோபினா நாயுடு, 'புரட்சிச் செம்மல் கொடைநெஞ்சர்' மேகராஜா ஆகியோரின் முழுமையான ஆதரவுடன் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

​எம்.ஜி.ஆர் மன்றத்தில் கூடுதல் வகுப்புகள் மற்றும் கணினிப் பயிற்சியில் பயின்று வரும் மாணவர்களுக்காக இந்தச் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும், 'நானும் ஒரு தொழிலாளி' தொடர் நிகழ்ச்சிக்கு பல ஆண்டுகளாகப் பேருதவி வழங்கி வரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் தலைவர் எம்.ஜி. குமார் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். ஏழைகளுக்கான இதுபோன்ற நலத்திட்ட நிகழ்ச்சிகள் எம்.ஜி.ஆர் பாணியில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Content image

இந்நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த 'கடார கர்ணன்' டாக்டர் சின்னையா, "மாணவர்களுக்கும் முதியவர்களுக்கும் இவ்வுதவிகளை வழங்கும் போது என் இதயம் பெருமகிழ்ச்சியடைகிறது என்றார்.

கருத்துரைத்த 'புரட்சிச் செம்மல்' மேகராஜா, மக்களுக்குச் சேவை செய்வது சிறப்பு, அதிலும் ஏழை மக்களுக்கு உணவளித்து உதவுவது மிகவும் சிறப்பு எனக் குறிப்பிட்டார்.

​பின்தங்கிய மாணவர்களைக் கல்வி வழியில் உயர்த்துவதை ஒரு சமூகக் கடமையாகக் கொண்டு தான் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட எம்.ஜி. குமார், டாக்டர் சின்னையா எப்போதும் மாணவர்களுக்குப் பக்கபலமாக நின்று உதவி வருவதைச் சுட்டிக்காட்டினார். மேலும், டாக்டர் ஜோபினா நாயுடு நற்பண்பு மிக்கவராகவும், சமூகச் சேவகர் மேகராஜா சிறந்த பண்பாளராகவும் திகழ்வதாக அவர் புகழாரம் சூட்டினார்.நிறைவாக, கலந்துகொண்ட மாணவர்களுக்கும் முதியவர்களுக்கும் தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.

Content image

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions