TBC News Malaysia

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

பிறை தொகுதியில் 1,200 பேருக்கு தீபாவளி நலத்திட்ட உதவிகள - டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு வழங்கினார்!

Share This Article:

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பிறை சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 1,200 ஏழை, எளியப் பயனாளிகளுக்குத் தீபாவளி அன்பளிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பிறை தொகுதியில் 1,200 பேருக்கு தீபாவளி நலத்திட்ட உதவிகள - டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு வழங்கினார்!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பிறை சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 1,200 ஏழை, எளியப் பயனாளிகளுக்குத் தீபாவளி அன்பளிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

​பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு தலைமையில், பிறை சட்டமன்றத் தொகுதி சேவை மையத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.


Content image

பிறை, சாய் லெங் பார்க் பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

​நிகழ்ச்சியில் உரையாற்றிய டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு, இவ்விழா தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 1,000 பேருக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்ட நிலையில், இவ்வாண்டு பயனாளிகளின் எண்ணிக்கை 1,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பதிவு செய்து தகுதிபெற்ற ஒவ்வொரு பயனாளிக்கும் தலா ரிம 120 மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன,என்று தெரிவித்தார்.

Content image

மேலும் தொடர்ந்த அவர் இந்த உதவி மிகப் பெரிய அளவிலானதாக இல்லாவிட்டாலும், இதைப் பெற்றுக்கொண்ட மக்களின் முகங்களில் காணப்படும் மகிழ்ச்சியும் புன்னகையும்தான் எனக்குப் பெரு நிறைவைத் தருகிறது. தீபாவளி காலத்தில் குடும்பங்களின் பண்டிகைக்காலச் செலவுச் சுமையைக் குறைக்க இது ஓரளவு உதவியாக இருக்கும்.

​பிறை சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் இனம், மதம் பாராமல் அனைத்துத் தரப்பு மக்களின் நலனுக்காகவும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவது எனது தலையாய கடமையாகும்.

அன்பு, ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் இத்தகைய சமூகநல திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்," எனக் குறிப்பிட்டார்.

​இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உதவியைப் பெற்றுக்கொண்ட பொதுமக்கள், டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமுவுக்கும் பிறை சட்டமன்ற சேவை மையத்திற்கும் தங்களது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டனர்.

Content image

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions