ரஷியா மீது 660 டிரோன்களால் மிகப்பெரிய தாக்குதல் நடத்திய உக்ரைன்
ரஷியா–உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷியாவின் 12 மாகாணங்களை குறிவைத்து 660 டிரோன்களை பயன்படுத்தி உக்ரைன் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. பெரும்பாலான டிரோன்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷியா தெரிவித்துள்
ரஷியா–உக்ரைன் போர் 1,583வது நாளாக நீடித்து வரும் நிலையில், ரஷியா மீது உக்ரைன் மிகப்பெரிய அளவிலான டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தப் போரில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்கள் உள்ளிட்ட இராணுவ உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றன. போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் இதுவரை பலனளிக்காத நிலையில், மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் ஒரே நேரத்தில் ரஷியாவின் 12 மாகாணங்களை குறிவைத்து மொத்தம் 660 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷியாவின் வான்பாதுகாப்பு அமைப்புகள் பெரும்பாலான டிரோன்களை இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் உயிரிழப்போ அல்லது பெரிய அளவிலான சேதமோ ஏற்படவில்லை என்றும் ரஷியா தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

0 Comments
No comments yet. Be the first to comment.