TBC News Malaysia

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

உழைப்பால் உயர்ந்த உன்னத மனிதர் பினாங்கு ஆளுநரின் பிறந்தநாள் விழாவில் தொழிலதிபர் ஆர். முரளிதரனுக்கு ‘டத்தோஸ்ரீ’ (DGPN) விருது வழங்கி கௌரவம்!

Share This Article:

பினாங்கு ஆளுநரின் 85வது பிறந்தநாள் கௌரவ விழாவில், தொழிலதிபரும் சமூகச் சேவகருமான ஆர். முரளிதரன் ரகுநாதனுக்கு ‘டத்தோஸ்ரீ’ (DGPN) விருது வழங்கப்பட்டது. கல்வி, சமூக நலம் மற்றும் ஆன்மீகப் பணிகளில் அவர் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி இந்த உயரிய கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

உழைப்பால் உயர்ந்த உன்னத மனிதர் பினாங்கு ஆளுநரின் பிறந்தநாள் விழாவில் தொழிலதிபர் ஆர். முரளிதரனுக்கு ‘டத்தோஸ்ரீ’ (DGPN) விருது வழங்கி கௌரவம்!

"உண்மை, உழைப்பு, நேர்மை" ஆகிய உயரிய தாரக மந்திரங்களை நெஞ்சில் ஏந்தி, தனது கடின உழைப்பால் மலேசியாவின் முன்னணி தொழிலதிபராகவும், ஈகை குணம் கொண்ட சிறந்த சமூகச் சேவகராகவும் திகழும் ஏகேஎஸ் நிவாஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டத்தோ முரளிதரன் ரகுநாதன் அவர்களுக்கு, பினாங்கு மாநில ஆளுநர் அவர்களின் 85-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாநிலத்தின் மிக உயரிய விருதான ‘டி.ஜி.பி.என்’ (D.G.P.N) எனப்படும் ‘டத்தோஸ்ரீ’ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.


​கல்வி, ஆலயம், சமுதாயம் எனப் பல்வேறு துறைகளில் நீண்ட நெடுங்காலமாக அளப்பரிய சேவையாற்றி வரும் டத்தோஸ்ரீ முரளிதரன் ரகுநாதன் அவர்களின் மக்கள் நலப் பணிகளைப் பாராட்டி, ஏற்கனவே அவருக்கு டி.எம்.பி.என் (D.M.P.N), டி.எஸ்.பி.என் (D.S.P.N), டி.ஜே.என் (D.J.N), பி.கே.டி (P.K.T), பி.ஜே.கே (P.J.K) ஆகிய உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


அதன் தொடர்ச்சியாக, தற்போது அவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த 'டத்தோஸ்ரீ' (DGPN) விருது, அவரது அர்ப்பணிப்புமிக்க சமூகக் கடப்பாட்டிற்கு மகுடம் சூட்டுவதாக அமைந்துள்ளது.

​அளப்பரிய சமூக, கல்வி மற்றும் ஆன்மீகச் சேவைகள், ​டத்தோஸ்ரீ முரளிதரன் அவர்கள் வெறும் தொழிலதிபராக மட்டுமே சுருங்கிவிடாமல், தான் ஈட்டிய செல்வத்தை சமுதாயத்தின் விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காக வாரி வழங்கும் வள்ளலாகத் திகழ்கிறார்.

Content image

கல்விப் பணி: ஏழை எளிய மாணவர்களின் கல்வித் தடையின்றித் தொடர நிதியுதவி வழங்குவதிலும், தமிழ்ப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் தொடர்ந்து முன்னின்று செயலாற்றி வருகிறார்.


​ஆன்மீகப் பணி: பினாங்கு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல இந்து ஆலயங்களின் திருப்பணிகளுக்கும், குடமுழுக்கு விழாக்களுக்கும், ஆன்மீக நெறி வளர்க்கும் நற்பணிகளுக்கும் தொடர்ந்து தாராளமாகப் நிதியுதவி வழங்கி ஆதரவளித்து வருகிறார்.


​சமூக நலம்: வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும், பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை நேரடியாக வழங்குவதிலும் இவரது பங்களிப்பு அளவிடற்கரியது.


​இவரின் இந்த அனவரத நற்பணிகளுக்கு, அவரது அன்பான துணைவியார் டத்தின்ஸ்ரீ பத்மினி பப்பு பிள்ளை அவர்களும் தோளோடு தோள் நின்று பேராதரவு வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Content image

ஏகேஎஸ் நிவாஸ் (AKS Nivaas): பாரம்பரியத்தின் உலகளாவிய அடையாளம்

​பினாங்கின் மாக் மண்டின் மற்றும் பட்டர்வொர்த் வட்டாரத்தை மையமாகக் கொண்டு இயங்கும் புகழ்பெற்ற ‘ஏகேஎஸ் நிவாஸ் எஸ்டிஎன். பிஹெச்டி’ (AKS Nivaas Sdn. Bhd.) நிறுவனத்தின் பின்னணி வியக்கத்தக்கது.


​கடந்த 1948-ஆம் ஆண்டு பட்டர்வொர்த் நகரில் ஒரு எளிய குடும்ப வணிகமாகத் தொடங்கப்பட்ட பாரம்பரிய நல்லெண்ணெய் தயாரிப்பு நிறுவனம், இன்று மலேசியாவின் முன்னணி உணவு தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.


​தற்போது, டத்தோஸ்ரீ முரளிதரன் மற்றும் டத்தின்ஸ்ரீ பத்மினி ஆகியோரின் சிறப்பான வழிகாட்டுதலின் கீழ், நல்லெண்ணெய் மட்டுமல்லாது உயர்தர மசாலாப் பொருட்கள், கறி மசாலா தூள்கள், உடனடி உணவுக் கலவைகள் (Instant Food Mixes) போன்றவற்றைத் தயாரித்து, உள்ளூர் சந்தை மட்டுமன்றி, சர்வதேச தரத்துடன் உலகளாவிய ரீதியிலும் தங்களது வணிகக் கிளையை வெற்றிகரமாக விரிவுபடுத்தி சாதனை படைத்து வருகின்றனர்.



Content image

தொழில்நுட்ப உள்கட்டமைப்பில் தடம் பதிக்கும் டைனுரிகோம்

​டத்தோஸ்ரீ முரளிதரன் அவர்கள் மலேசிய மின்சார வாரியமான தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) மற்றும் தேசிய வீட்டுவசதி நிறுவனமான சியாரிகாட் பெருமஹான் நெகாரா பெர்ஹாட் (SPNB) ஆகியவற்றில் அதிகாரப்பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட ‘டைனுரிகோம் எஸ்டிஎன். பிஹெச்டி’ (Dynuricom Sdn. Bhd.) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

​நம்பகமான பயன்பாட்டுத் தீர்வுகளை (Utility Solutions) வழங்குவதில் முத்திரை பதித்துள்ள இந்நிறுவனம், மலேசியா முழுவதும் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிலத்தடி கேபிள் திட்டங்களில் (Underground Cable Projects) மிக முக்கியப் பங்காற்றி வருகிறது.

​தொழில் துறையில் இமாலய வெற்றியைக் கண்ட போதிலும், எளிமையும் மனிதநேயமும் கொண்டு வாழும் டத்தோஸ்ரீ முரளிதரன் ரகுநாதன் அவர்களுக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டிருப்பது.

பினாங்கு மாநிலத் தமிழ் சமூகத்திற்கும் ஒட்டுமொத்த மலேசியத் தமிழர்களுக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. இவருக்கு பல்வேறு தமிழ் அமைப்புகளும், வணிகப் பெருமக்களும், பொதுமக்களும் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions