TBC News Malaysia

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

புக்கிட் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதியில் கோலாகலமாக நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டம் - ராம்கார்பால் சிங் எம்.பி தீபாவளி அன்பளிப்பு வழங்கி வாழ்த்து!

Share This Article:

புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கார்பால் சிங் தலைமையில் நடைபெற்ற தீபாவளி விழாவில், அப்பகுதியைச் சேர்ந்த ஏழை எளிய குடும்பங்களுக்கு ரிம 30,000 மதிப்பிலான உதவிப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன. மேலும், புதிய விரைவுச் சாலைக்கு 'லெபுஹ்ரயா புக்கிட் கெலுகோர்' எனப் பெயரிட அவர் முன்மொழிந்த இந்த நிகழ்வில், பினாங்கு முதலமைச்சர் சௌ கொன் இயோ சிறப்பு அழைப்பாளராகக் கலந்து சிறப்பித்தார்.

புக்கிட் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதியில் கோலாகலமாக நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டம் -  ராம்கார்பால் சிங் எம்.பி தீபாவளி அன்பளிப்பு வழங்கி வாழ்த்து!

ஃபார்லிமில் உள்ள சன்ஷைன் சென்ட்ரலில் நடைபெற்ற இந்நிகழ்வில், புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ராம்கார்பால் சிங் கலந்து கொண்டு, தொகுதி மக்களுக்குத் தீபாவளி விருந்தளித்ததுடன் சிறப்பு அன்பளிப்புகளையும் வழங்கினார். மலேசியாவில் வாழும் அனைத்து இந்து பெருமக்களுக்கும் தமது நெஞ்சார்ந்த தீபாவளி வாழ்த்துகளைப் பதிவு செய்த ராம்கார்பால் சிங், தீபாவளி என்பது ஒரு தேசிய விழாவாகும் என்றும், இன வேறுபாடின்றி அனைத்து மக்களும் ஒன்று கூடி இந்தத் தீபாவளி குதுகலத்தைக் கொண்டாடி மகிழ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.​ரிம 30,000 மதிப்பிலான பற்றுச்சீட்டுகள் விநியோகம் செய்தி வாழ்த்துக்கூறிய அவர் தமது புக்கிட் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட செரி டெலிமா, பாயா தெருபோங் மற்றும் ஆயர் ஈத்தாம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஏழை எளிய குடும்பங்களுக்கு உதவிக் கரம் நீட்டும் வகையில், தலா ரிம 60 மதிப்புள்ள 500 பற்றுச்சீட்டுகள் ராம்கார்பால் விநியோகித்தார்.


Content image


​இந்நிகழ்வில் பேசிய அவர், தற்போதைய வாழ்க்கைச் செலவு உயர்வு பல குடும்பங்களுக்குப் பெரும் சவாலாக இருப்பதை நான் நன்கு அறிவேன். இந்தச் சிறிய உதவி அவர்களுக்குச் சற்று நிம்மதியைத் தருவதுடன், பண்டிகைக் கால ஏற்பாடுகளைச் செய்ய உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன். மக்களுக்குச் சேவை செய்வது என்பது எப்போதும் அவர்களுடன் தொடர்பில் இருப்பதையும், அவர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு உரிய உதவிகளைச் செய்வதையுமே குறிக்கிறது எனக் கூறினார். நிகழ்வின் தொடர்ச்சியாகப் பேசிய ராம்கார்பால், பண்டார் பாரு ஆயர் ஈத்தாம் - துன் டாக்டர் லிம் சோங் இயூ விரைவுச் சாலை இணைப்புத் திட்டத்தின் 'பேக்கேஜ் 2' பகுதிக்கு 'லெபுஹ்ரயா புக்கிட் கெலுகோர்' (Lebuhraya Bukit Gelugor) என்று பெயரிட முன்மொழிந்தார். அவரது இந்த அறிவிப்புக்கு விழாவில் திரண்டிருந்த பொதுமக்கள் பலத்த கரகோஷம் எழுப்பி வரவேற்பு தெரிவித்தனர்.


Content image

நிகழ்வின் தொடர்ச்சியாகப் பேசிய ராம்கார்பால், பண்டார் பாரு ஆயர் ஈத்தாம் - துன் டாக்டர் லிம் சோங் இயூ விரைவுச் சாலை இணைப்புத் திட்டத்தின் 'பேக்கேஜ் 2' பகுதிக்கு 'லெபுஹ்ரயா புக்கிட் கெலுகோர்' (Lebuhraya Bukit Gelugor) என்று பெயரிட முன்மொழிந்தார். அவரது இந்த அறிவிப்புக்கு விழாவில் திரண்டிருந்த பொதுமக்கள் பலத்த கரகோஷம் எழுப்பி வரவேற்பு தெரிவித்தனர்.வரவிருக்கும் பினாங்கு மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் இக்கோரிக்கை பரிசீலனைக்குக் கொண்டு வரப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்



Content image

சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட பினாங்கு மாநில முதலமைச்சர் சௌ கொன் இயோ, தொகுதி மக்களுக்குத் தமது தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து உரையாற்றிய அவர், பினாங்கு மாநிலத்தின் உட்கட்டமைப்பு மேம்பாடுகள், வெள்ளத் தடுப்பு திட்டங்கள் மற்றும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி குறித்துத் தனது கருத்துரையை வழங்கினார். பினாங்கின் பாதுகாப்பையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த அரசாங்கம், தனியார் துறை மற்றும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Content image

​தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கார்பால் சிங் மற்றும் முதலமைச்சர் சௌ கொன் இயோ ஆகியோர் பயனாளிகளுக்குச் சிறப்பு பற்றிச்சீட்டுகளை வழங்கினர்.

​இந்நிகழ்வில் மாநிலத் துணை முதலமைச்சர் II ஜகதீப் சிங் தியோ, ஆயர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் நங், செரி டெலிமா சட்டமன்ற உறுப்பினர் கானி டான் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions